5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு-தாளாளர் கைது செய்யப்பட்ட நிலையில் பள்ளிக்கு சீல்

0 2739

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தனியார் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது.

சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய அதே பள்ளியின் தாளாளரான பக்கிரி சாமி கடந்த மாதம் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் பள்ளியில் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளியின் உரிமம் கடந்த 2014ஆம் ஆண்டே முடிவடைந்து விட்டதை கண்டறிந்த அவர், பள்ளியைப் பூட்டி சீல் வைத்து, அங்கு படித்த 101 மாணவர்களை பெற்றோர்கள் விரும்பும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்தார். இதன் பேரில் பள்ளிக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments