200 யூனிட் இலவச மின்சாரம்.. குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய் உதவித்தொகை-காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு
கர்நாடக சட்டமன்றத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை பெங்களூருவில் வெளியிட்டார்.
அதில் மாதந்தோறும் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் உதவித்தொகை, அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
ஆட்சிக்கு வந்த ஓராண்டிற்குள் அரசு துறையில் காலியாக உள்ள இரண்டரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும், பழைய ஓய்வூதியத்திட்டத்தை நீட்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்ற வாக்குறுதிகளும் இடம்பெற்றுள்ளன.
Comments