விதிகளை மீறிய காரணத்திற்காக 3,500-க்கும் மேற்பட்ட கடன் செயலிகளை பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியது கூகுள்..!
இந்தியாவில் விதிகளை மீறிய காரணத்திற்காக 3,500-க்கும் மேற்பட்ட தனிநபர் கடன் செயலிகளை பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது.
அண்மையில், கூகுள் பிளே ஸ்டோரின் தனியுரிமை கொள்கைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.
அதன்படி, கடன் வழங்கும் செயலிகளுக்கு வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பெறுத ல், அவற்றை பயன்படுத்துதல், தொடர்பு கொள்ளுதல் உள்ளிட்டவற்றில் கூகுள் விதிகளை கடுமையாக்கியது.
சமீபத்தில், நாடு முழுதும் ஆன்லைன் லோன் ஆப் மோசடியில் ஈடுபட்ட 14 பேரை மும்பை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, பொதுமக்களை ஏமாற்றும் தனிநபர் கடன் செயலிகளை நீக்கி கூகுள் இந்தியா நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Comments