டெல்லியில் கோடைகாலத்தில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் செயல் திட்டம்
டெல்லியில், கோடைக் காலத்தில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் செயல் திட்டம் வகுத்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அதன்படி, கட்டுமானத்திலிருந்து வெளிவரும் தூசியினால் ஏற்படும் மாசுவைக் கட்டுப்படுத்த, 500 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான கட்டுமானங்கள் கண்காணிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தூசி மாசுபாடு, குப்பைகளை திறந்த வெளியில் எரித்தல், தொழிற்சாலை பகுதிகளில் கழிவுகளை கொட்டுதல் ஆகியவற்றை சரிபார்க்க ரோந்து குழுக்கள் அமைக்கப் படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தூசி மாசுவை சமாளிக்க சாலை துப்புரவு இயந்திரங்கள், தண்ணீர் தெளிப்பான்கள், நடமாடும் புகை எதிர்ப்பு துப்பாக்கிகளை அம்மாநில அரசு வாங்கியுள்ளது.
Comments