உழைப்பாளர் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டம்.. பல்வேறு இடங்களில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள்

0 1721

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், பல்வேறு பிரச்சனைகள் காரணமாக சில இடங்களில் கூட்டங்கள் பாதியிலே நிறுத்தப்பட்டது. சேலம் மாவட்டம் கம்மாளப்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை மாற்றி அமைக்கும் முடிவினை எதிர்த்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கூட்டம் நிறுத்தப்பட்டது.

தருமபுரியில் பாலக்கோடு ஒன்றியம் எர்ரணஹள்ளி ஊராட்சியில் குடிநீர் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பிய கிராம மக்களிடம், ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் மிரட்டும் தொணியில் பேசியதாக கூறப்படும் நிலையில் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

மதுரை வாடிப்பட்டி அருகே செமினிப்பட்டி ஊராட்சியில் தனியார் அட்டை கம்பெனிக்கு அனுமதி அளித்ததாக ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர்.

ராசிபுரம் அருகே மங்களாபுரம் பஞ்சாயத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் மோசடி நடைபெறுவதாக கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு முறையாக பதில் அளிக்கவில்லை என பஞ்சாயத்து தலைவரிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments