வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார இருசக்கர வாகனத்தில் தீ விபத்து..! அருகில் இருந்த வாகனங்களுக்கும் தீப்பற்றி எரிந்து சேதம்

0 1959

கும்பகோணத்தில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார இருசக்கர வாகனத்தில் பற்றிய தீயால் அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் மற்றும் மேலும் ஒரு இருசக்கர வாகனத்தில் தீப்பற்றி சேதமடைந்தன.

ஆழ்வார்கோயில் தெருவில் வசித்துவரும் சதீஷ் என்பவர் நேற்று இரவு தனது மின்சார இருசக்கர வாகனத்திற்கு சார்ஜ் போட்டுவிட்டு உறங்கச் சென்றுள்ளார்.

இன்று காலை ஸ்கூட்டரில் இருந்து புகை வந்த நிலையில் உடனடியாக தீ பிடித்து எரிய தொடங்கியுள்ளது. அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காருக்கும் தீ பரவி, வேகமாக பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனால் வீட்டின் ஒரு பகுதியிலும் தீ பற்றியுள்ளது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு மின்சார இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் முற்றிலும் எரிந்தது.

வீட்டிற்குள் இருந்த சதீஷ் மற்றும் அவரது மனைவிக்கு மயக்கம் ஏற்பட்டதையடுத்து இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீ விபத்து தொடர்பாக கும்பகோணம் நகர கிழக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments