அகில இந்திய கிராம கோவில் பூசாரிகள் பேரவை என்ற பெயரில் பணம் வசூல் செய்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்த கிராம பூசாரிகள்!
சிவகங்கையில் அகில இந்திய கிராம கோவில் பூசாரிகள் பேரவை என்கிற பெயரில் பணம் வசூல் செய்த போலி ஆசாமி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சிவகங்கையில் தனியார் திருமண மஹாலில் அகில இந்திய கிராம கோயில் பூசாரிகள் பேரவை சார்பில் மாவட்ட மாநாடு நடைபெறுவதாக வந்த கடிதத்தை நம்பி மாவட்டம் முழுவதும் இருந்து 200 கிராம பூசாரிகள் அங்கு சென்றுள்ளனர்.
அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் இந்த அமைப்பில் ஆயுட்கால உறுப்பினராக சேர்ந்தால் தான் சலுகைகள் கிடைக்கும் என்று கூறி வந்தவர்களிடம் தலா 400 ரூபாய் வசூலும் செய்துள்ளார்.
இந்நிலையில் அவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கிராம பூசாரிகள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அவரிடம் இருந்து பணத்தை மீட்ட போலீசார் அனைத்து பூசாரிகளுக்கும் திரும்ப கொடுத்தனர்.
Comments