திருச்சி அருகே விவசாய சங்க நிர்வாகி வெட்டிக் கொலை.. போலீசார் தீவிர விசாரணை!

0 1994

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே விவசாய சங்க நிர்வாகி அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

லால்குடி அருகே பி.கே.அகரம் கிராமத்தைச் சேர்ந்த சண்முக சுந்தரம், தமிழ்நாடு விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு மாநில செயலாளராக இருந்து வந்தார்.

குடும்ப பிரச்சனையில் மனைவி பிரிந்து சென்றுவிட, வீட்டில் தனியாக வசித்து வந்த சண்முகசுந்தரத்திற்கு, அருகில் வசிக்கும் உறவினர்கள் உணவு கொடுத்து வந்துள்ளனர்.

அதன்படி காலை உணவு கொடுக்க வந்த உறவினர்கள், வீட்டின் படுக்கையில் சண்முகசுந்தரம் கொலை செய்யப்பட்டு கிடப்பது குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அதிகாலையில் கொலை நடந்திருக்கலாம் எனவும், விவசாய பிரச்சனை, ஆக்கிரமிப்பு, பெண் விவகாரங்களில் சண்முக சுந்தரம் தலையிட்டு வந்ததால் அதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments