ஊழலுக்கு எதிராக சண்டையிடுவதால் காங்கிரஸ் கட்சி என்னை வெறுக்கிறது - பிரதமர் மோடி!
ஊழலுக்கு எதிராக சண்டையிடுவதால் காங்கிரஸ் கட்சி தன்னை வெறுப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலையொட்டி கர்நாடகாவின் கோலார், சன்னபட்னா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்.
அதில் பேசிய அவர், துரோகத்தின் இன்னொரு பெயர் காங்கிரஸ் என்றும், விவசாயிகள், இளைஞர்கள், ஏழை மக்களை காங்கிரஸ் கட்சி புறக்கணித்ததாகவும் கூறினார்.
மேலும், கர்நாடகாவின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கட்சிகள் தடையாக இருப்பதாகவும் பிரதமர் விமர்சித்தார்.
கர்நாடகாவின் உட்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி போன்றவற்றிற்கு பாஜக அரசு முக்கியத்துவம் அளித்ததாகவும், தொழில்முனைவோர் மையமாக மாநிலம் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Comments