பஞ்சாப்பில் தனியார் ஆலையில் விஷ வாயு கசிவு - 11 பேர் பலி

0 2079
பஞ்சாப்பில் தனியார் ஆலையில் விஷ வாயு கசிவு - 11 பேர் பலி

பஞ்சாபின் லூதியானாவில் தனியார் ஆலையில் ஏற்பட்ட விஷ வாயு கசிவால் 11 பேர் பலியாகினர்.

கியாஸ்புரா பகுதியில் செயல்பட்டு வந்த ஆலையில், இன்று காலை திடீர் விஷ வாயு கசிவு ஏற்பட்டது. தகவலின் பேரில் விரைந்த பேரிடர் மீட்புக்குழுவினர், மயக்க நிலையில் இருந்தோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும்,அப்பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றி வருவதுடன், மீட்பு பணியிலும் தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

விஷவாயு தாக்கி 11 பேர் உயிரிழந்தது வருத்தமளிப்பதாக கூறிய முதலமைச்சர் மான் சிங், தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments