பேனா நினைவுச் சின்னத்திற்கு மத்திய அரசு அனுமதி
சென்னை மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக கடலுக்கு நடுவே 137 அடி உயர பேனா சின்னம் அமைக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை தயாரித்த தமிழ்நாடு அரசு, பேனா சின்னம் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தது.
தமிழ்நாடு அரசின் விண்ணப்பித்தை பரிசீலித்த மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு, ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் காலத்தில் கட்டுமானம் மேற்கொள்ளக் கூடாது, ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்று பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 15 நிபந்தனைகளுடன் பேனா சின்னம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது.
Comments