பகையுணர்வைத் தூண்டும் பேச்சுகள்: புகார் இல்லை என்றாலும் வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி
பகைமையைத் தூண்டும் பேச்சுகளை பேசுவோர் மீது புகார் இல்லை என்றாலும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
வழக்குப் பதிவு செய்ய தாமதம் செய்தால் அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.நாட்டின் மதசார்பற்ற அடிப்படைக்கு ஊறு விளைவிக்கும் பேச்சுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி ஆகிய மாநிலங்களில் மதரீதியாக பகையுணர்வைத் தூண்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
Comments