தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் ரஷ்யாவில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல்

0 2822

தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் ரஷ்யாவில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரஷ்யாவில் உள்ள தனது உற்பத்தி ஆலைகளை கசகஸ்தான் நிறுவனத்திற்கு விற்க திட்டமிட்டுள்ளதாக தென் கொரிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்யாவில் உள்ள தொழிற்சாலைகளை விற்பனை செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், ரஷ்ய அரசாங்கத்தின் இறுதி ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது.

ரஷ்யாவில் தங்கள் வணிகத்தின் எதிர்காலத்திற்கான பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து வருவதாகவும், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments