வடகொரியாவை எச்சரிக்கும் விதமாக அணு ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை நிறுத்துகிறது அமெரிக்கா
வடகொரியாவை எச்சரிக்கும் விதமாக அணு ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை தென் கொரியாவுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து தென்கொரிய அதிபர் யூன் சுக் யோலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அறிவித்த கூட்டுப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பல் 1980ம் ஆண்டுகளுக்குப் பின்னர் தங்கள் பகுதிக்கு வரவிருப்பதாகவும், தங்களை முழுமையாகப் பாதுகாக்க இருப்பதாகவும் தென் கொரியா தெரிவித்துள்ளது.
மேலும் தென் கொரியா நோக்கி வரும் ஏவுகணைகள், விமானம் தாங்கிக் கப்பல், நீர்மூழ்கிக் கப்பல்கள், நீண்ட தூர குண்டு வீச்சு விமானங்களையும் தடுக்க அமெரிக்கா உறுதியளித்துள்ளதாக தென் கொரிய அரசு குறிப்பிட்டுள்ளது.
Comments