நெட்பிளிக்ஸின் ஆவணப்படத்தில் நடிக்கிறார் பாரக் ஒபாமா

0 1213

அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஆவணப்படத்தில் நடிக்கிறார். இதற்கான ட்ரெய்லரை நெட்பிளிக்ஸ் வியாழக்கிழமை வெளியிட்டது. இதில் முன்னாள் அமெரிக்க அதிபர் அந்நாட்டு மக்களின் வாழ்க்கை முறையை ஆராய்கிறார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில், இந்தத் தொடரில் பல்வேறு தொழில்கள் உள்ள அமெரிக்கர்களுடன் பேசுவதாகவும், விருந்தோம்பல், தொழில்நுட்பம், வீட்டு பராமரிப்பு உள்ளிட்ட தலைப்புகளில் பணிகள் செய்ய இருப்பதாகவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.

2018ம் ஆண்டில் ஒபமா மற்றும் மிச்செல் ஒபாமா ஆகியோரால் நிறுவப்பட்ட கான்கார்டியா ஸ்டுடியோ மற்றும் ஹையர் கிரவுண்ட் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட இந்தத் தொடர் அடுத்த மாதம் 17ம் தேதி நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments