"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
பெட்டிக்கடையில் நின்றுக் கொண்டிருந்த மாணவர் மீது கார் மோதல்... வேகத்தடை கோரி சாலை மறியலில் குதித்த பொதுமக்கள்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தறிகெட்டு வந்த கார் மோதி சாலையோரம் நின்ற மாணவர் பலத்த காயம் அடைந்ததால், அங்கு வேகத்தடை அமைக்கக் கோரி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கார் மோதியதில் காயமடைந்த சேத்தூரைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவரான மார்டினை அதே காரில் ஏற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார் மோதியதால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தது. வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக கூறி மறியலை கைவிட மறுத்து போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்
இதனால் தென்காசி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் ஆம்புலன்சுக்கு மட்டும் மனிதாபிமானத்தோடு மக்கள் வழிவிட்டனர்
Comments