தென்கொரியா அதிபர் யூன் சுக் இயோல் - டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் சந்திப்பு
அமெரிக்கா சென்றுள்ள தென்கொரியா அதிபர் யூன் சுக் இயோல், உலக பணக்காரர்களின் வரிசையில் முதலிடத்தில் உள்ள டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்கை சந்தித்து பேசினார்.
6 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள தென்கொரியா அதிபர், அமெரிக்க தொழிலதிபர்களை சந்தித்து தென்கொரியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து வருகிறார். இதன்படி, எலன் மஸ்க்கை தென்கொரிய அதிபர் சந்தித்து பேசினார். அப்போது, தென்கொரியாவில் பேட்டரி தொழிற்சாலைகள் அமைத்தால் வரிச்சலுகைகள் உள்ளிட்ட உதவிகளை வழங்க தயார் என கூறினார்.
இந்த சந்திப்பின்போது, டெஸ்லாவுக்கான பேட்டரி உற்பத்தியில் தென்கொரியா முக்கிய பங்காற்றுவதாக தெரிவித்த எலன்மஸ்க், விரைவில் ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக குறிப்பிட்டார்.
Comments