தேசிய மருத்துவ சாதனங்கள் கொள்கைக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்!

0 1550

சுகாதாரத்துறை நோக்கங்களை பூர்த்தி செய்ய ‘தேசிய மருத்துவ சாதனங்கள் கொள்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேக் இன் இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு ஆதரவாக உள்நாட்டு மருத்துவ சாதனங்கள் உற்பத்தியை இது ஊக்குவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் மருத்துவ சாதனங்கள் துறையின் சந்தை மதிப்பு 90,ஆயிரம் கோடி ரூபாய் என்றும், உலகளாவிய சந்தையில் அதன் பங்கு 1 புள்ளி 5 சதவீதமாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஏற்கனவே இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 4 மருத்துவ சாதனப் பூங்காக்களை அமைப்பதற்கான  ஊக்கத்தொகை திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments