ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது

0 1176

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் இன்று தொடங்குகிறது.

சீனா, ரஷ்யா,தஜகஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். பாகிஸ்தான் அமைச்சர் மட்டும் காணொலி வாயிலாக பங்கேற்க இருக்கிறார். தீவிரவாத எதிர்ப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து எட்டு நாடுகளின் அமைச்சர்களும் விவாதிக்க உள்ளனர்.

பெலாரஸ், ஈரான் உள்ளிட்ட நாடுகளையும் இந்த மாநாட்டில் பார்வையாளர்களாகப் பங்கேற்க இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. மாநாட்டுக்கு இடையே ரஷ்யா மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சர்களுடன் ராஜ்நாத்சிங் நேரடியாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments