சட்டிஸ்கர் மாநிலம் தண்டேவாடா அருகே நக்சலைட்கள் தாக்குதலில் 11 பேர் பலி
சட்டிஸ்கர் மாநிலம் தண்டேவாடா அருகே குண்டுவெடிப்பில் 10 காவலர்கள் உள்பட 11 பேர் பலியான தாக்குதல் சம்பவத்துக்கு, 50 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களை நக்சலைட்டுகள் பயன்படுத்தி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் வாகனம் வெடித்து சிதறியதில் மாவட்ட ரிசர்வ் காவலர் பிரிவைச் சேர்ந்த 10 வீரர்களும் கார் ஓட்டுனரும் கொல்லப்பட்டனர்.
காயம் அடைந்த வீரர்கள் மீது மாவோயிஸ்ட்டுகள் கொடூரமான முறையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியை போலீசார் சுற்றி வளைத்து நக்சலைட்டுகளைத் தேடி வருகின்றனர். இத்தாக்குதலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Comments