போலி மருத்துவர் என கைது செய்யப்பட்டவரை விடுவிக்க கோரி காவல்நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே போலி மருத்துவர் என கைது செய்யப்பட்டவரை விடுவிக்க கோரி பொதுமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.
தேனி மாவட்டம், அனுப்பப்பட்டி ஊராட்சியில் ரெங்கராம்பட்டி என்ற கிராமம் உள்ளது.இங்கு கேரளாவை சேர்ந்த பாபு என்பவர் 40 ஆண்டுகளாக குறைந்த கட்டணத்தில் ஹோமியோபதி மருத்துவம் பர்த்து வருகிறார்.
இந்த நிலையில் அதேபகுதியை சேர்ந்த ரகுராம் என்பவர் அளித்த புகாரின் பேரில் மருத்துவர் பாபு கைது செய்யப்பட்டார்.இதையடுத்து ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் மருத்துவரை விடுவிக்க வலியுறுத்தினர்.
அப்போது ஹோமியோபதி டாக்டர் அளித்த சிகிச்சையால் இதுவரை யாரும் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றும், பணம் இல்லாமல் சென்றால் கூட மருத்துவம் பார்த்து வருவதாகவும் எனவே அவரை விடுவிக்க வேண்டும் என்று வாதாடினர்.
இதன் பின்னர் போலீசார் மருத்துவர் பாபுவை அலோபதி சிகிச்சை அளிக்க கூடாது என எச்சரித்து விடுவித்தனர். ஹோமியோபதி டாக்டர் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஒரு கிராமமே போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் ஆண்டிப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Comments