3 நாட்களாக சாப்பிட உணவு இல்லை.. போர் முனையில் சந்தித்த திகில் அனுபவங்கள்.. பகிர்ந்த இந்தியர்கள்..

0 1986
சூடானில் போர் முனையில் நேரிட்ட திகில் அனுபவங்களை மீட்கப்பட்ட இந்தியர்கள் சிலர் பகிர்ந்துள்ளனர்.

சூடானில் போர் முனையில் நேரிட்ட திகில் அனுபவங்களை மீட்கப்பட்ட இந்தியர்கள் சிலர் பகிர்ந்துள்ளனர்.

சூடான் விரைந்துள்ள இந்திய போர்க் கப்பல்கள் மற்றும் ராணுவ விமானங்கள், இதுவரை சுமார் 500 பேரை மீட்டு சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்துச் சென்றுள்ளன.

அவர்களில் சிலர் செய்தியாளர்களிடம் பேசிய போது, மோதலில் ஈடுபட்ட குழுக்களில் ஒன்று துப்பாக்கி முனையில் தங்களை கொள்ளை அடித்ததாகவும், பல மணி நேரம் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து இருந்ததாகவும் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளனர்.

2-3 நாட்கள் வரை சாப்பிட உணவு இல்லாமல் பரிதவித்ததாக கூறியுள்ள அவர்கள், தங்களின் செல்ஃபோன்கள் திருடிச் செல்லப்பட்டதால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் நிர்கதியாக நின்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments