ஜூனியர் மாணவர்களை சாட்டையால் தாக்கிய சீனியர்கள்.. 8 பேர் சஸ்பெண்ட்

0 1633
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கல்லூரி விடுதியில் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்த, மூன்றாமாண்டு மாணவர்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கல்லூரி விடுதியில் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்த, மூன்றாமாண்டு மாணவர்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இக்கல்லூரியில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் 40 மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த விடுதியில், சீனியர் மாணவர்கள் செய்யச் சொல்லும் பணியை, ஜூனியர்கள் செய்யாவிடில் அவர்களுக்கு தண்டனை கொடுத்து ராகிங் செய்வது தொடர்கதையாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சீனியர் மாணவர்கள் சிலர் தாங்கள் சொன்ன பணியை செய்ய மறுத்த ஜூனியர்களை சாட்டையை கயிறுபோல் மாற்றி தாக்கிய வீடியோ வெளியானது.

இந்த வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார். அதன் பேரில், மூன்றாமாண்டு மாணவர்கள் 8 பேரை ஒரு மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட கல்லூரி முதல்வர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments