திருச்செந்தூர் கோயில் யானை தொட்டியில் உற்சாக குளியல்..
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை புதியதாக அமைக்கப்பட்ட குளியல் தொட்டியில் உற்சாக குளியலில் ஈடுபட்டது.
சரவண பொய்கையில் அமைக்கப்பட்ட குளியல் தொட்டியை அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, கோயில் யானை தெய்வானை குளியல் தொட்டிக்குள் இறக்கி விடப்பட்டது.
தொட்டியிலும், ஷவரிலும் குதூகலமாக அங்குமிங்கும் சுற்றி வந்த தெய்வானை பாகனுடன் சேர்ந்து உற்சாகமாக விளையாடியது.
Comments