ஸ்வீடனிலிருந்து ஏவப்பட்ட ராக்கெட் அண்டை நாடான நார்வேயில் விழுந்து விபத்து.!
ஸ்வீடன் அரசால் விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் துரதிர்ஷ்டவசமாக அண்டை நாடான நார்வேயில் விழுந்து விபத்துக்குள்ளானது.
பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் இருந்து விண்வெளி சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ஸ்வீடனின் எஸ்ரேஞ் விண்வெளி மையத்திலிருந்து ராக்கெட் ஏவப்பட்டது.
ஆய்வு செயற்கைக்கோளுடன் புறப்பட்ட ராக்கெட், 250 கிலோமீட்டர் உயரத்தை அடைந்தபோது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் திட்டமிட்ட பாதையிலிருந்து விலகி, நார்வேயில் உள்ள மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
மக்கள் வசிப்பிடத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் ராக்கெட் விழுந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
Comments