ஜப்பானின் லூனர் லேண்டர் நிலவில் இறங்க முயற்சித்தபோது விழுந்து நொறுங்கிவிட்டதாக தகவல்!

0 1911

ஜப்பானின் லூனர் லேண்டர் நிலவில் இறங்க முயற்சித்த போது விழுந்து நொறுங்கி விட்டதாக டோக்கியோவில் உள்ள அறிவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலவில் முதல் முறையாக இறங்க நினைத்த ஜப்பானின் கனவும் இதனால் தகர்ந்து விட்டது. ஆளில்லாத Hakuto-R Mission 1 lander நிலவில் இறங்குவதற்கான முயற்சியில் இருந்தது.

ஆனால் கடினமான தரையிறக்கம் காரணமாக அடுத்த 25 நிமிடங்களுடன் அதன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் அது காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு முறை நிலவில் இறங்குவதற்கான திட்டங்கள் உள்ளதாகவும் இந்த பின்னடைவு அதனைத் தடுத்துவிட முடியாது என்றும் ஜப்பான் அறிவியல் நிபுணர்கள் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments