கொளுத்தும் வெயிலை சமாளிப்பது எப்படி? மருத்துவர்கள் அறிவுரை
தமிழ்நாட்டில் கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் அன்றாடம் பின்பற்ற வேண்டிய மற்றும் தவிர்க்க வாழ்வியல் முறைகள் குறித்து மருத்துவர்கள் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
பழச்சாறுகளை குடிப்பதைவிட பழங்களை சாப்பிட வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. நீர்ச்சத்து அதிகம் உள்ள புடலங்காய், பூசணிக்காய், முள்ளங்கி போன்ற காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள்.
மேலும், செரிமானத்திற்கு கடினமாக இருக்கும் மாமிச உணவுகளையும், ஓட்டல்களில் சாப்பிடுவதையும் முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
Comments