ரிஷி சுனக்கின் கான்வாய்க்கு பின்னால் ஓடிச் செல்லும் போலீசார்.. காவல்துறையின் ஆற்றல் வீணடிக்கப்படுவதாக இணையவாசிகள் குமுறல்!
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் பாதுகாப்பு அணிவகுப்பில் போலீசார் ஏராளமானோர் ஓடிச் செல்வதற்கு அந்நாட்டு மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பிரிட்டன் நாடாளுமன்றத்திலிருந்து தனது இல்லத்திற்கு திரும்பிய ரிஷி சுனக்கின் கான்வாய்க்கு முன்னால் முதலில் சைக்கிளிலும், பின்னர் மோட்டார் சைக்கிள்களிலும் போலீசார் அணி அணியாக சென்று வழியை விலக்கி விட்டனர்.
அவர்களுக்குப் பின்னால் 4 ரேஞ்ரோவர் கார்களை கொண்ட கான்வாயில் ரிஷி சுனக் சென்றார். இந்த அணிவகுப்பில் போலீசார் பலர் ஓடியும் வந்தனர்.
ரிஷி சுனக்கின் பாதுகாப்பிற்கு காவல்துறையின் ஆற்றல் வீணடிக்கப்படுவதாக பிரிட்டன் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ஆனால், லண்டனின் பல்வேறு இடங்களில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் தான் பிரதமருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
Comments