சீனாவில் வரும் 29ஆம் தேதி முதல் வெளிநாட்டவருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை..!
சீனாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து வருவோர் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம் இல்லை என்று அந்நாடு அறிவித்துள்ளது.
வரும் 29 ஆம் தேதி முதல் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனாவுக்கான பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயமில்லை என்று பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் மாவோ நிங்க் தெரிவித்துள்ளார்.
பரிசோதனை கட்டாயமில்லை என்ற போதிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அறிவியல் சார்ந்த வகையில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என சீனா தெரிவித்துள்ளது.
சர்வதேச விமான சேவைகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மூலம் கிடைக்கும் வருவாய் வெகுவாக குறைந்ததால் சீன அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments