ரிலையன்ஸில் நெடுங்காலம் பணியாற்றிய ஊழியருக்கு ரூ.1,500 கோடி பங்களாவை பரிசளித்தார் முகேஷ் அம்பானி

0 2580

ரிலையன்ஸ் நிறுவனத்தில் நெடுங்காலம் பணியாற்றி அதன் வெற்றிக்கு வழி வகுத்தவர்களில் ஒருவரும், முகேஷ் அம்பானியின் வலதுகரமாக கருதப்படுபவருமான மனோஜ் மோடிக்கு, ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு பங்களாவை முகேஷ் அம்பானி பரிசளித்துள்ளார்.

ஒரு சதுரடி 45 ஆயிரம் ரூபாய் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படும் மும்பை மாநகரின் நெப்பியன் கடற்கரை சாலையில் அந்த 22 மாடி கட்டடம் அமைந்துள்ளது.

விருந்தாவன் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த கட்டடத்தின் ஒவ்வொரு தளமும் 8 ஆயிரம் சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. முதல் 7 தளங்கள் கார் நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட உள்ளதாகவும், மனோஜ் மோடியின் வீட்டில் உள்ள அறைக்கலன்கள் இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments