சூடானில் இருந்து முதற்கட்டாக இந்தியர்கள் 278 பேர் மீட்பு..!
சூடான் துறைமுகத்தில் இருந்து இந்தியர்கள் 278 பேருடன் ஐ.என்.எஸ்.சுமேதா கப்பல் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு புறப்பட்டது.
ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்நாட்டு போரால் சிக்கி தவிக்கும் இந்தியர்களை ஆப்ரேசன் காவேரி என்ற பெயரில் மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
முதற்கட்டமாக மீட்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் ஜெட்டாவிலிருந்து விமானப்படை விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்படுவர் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments