புதிய ஊதிய அட்டவணையால் அதிருப்தியடைந்த ஊழியர்கள் - ஏர் இந்தியா விளக்கம்
ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய ஊதிய அட்டவணையால் அதிருப்தியடைந்த ஊழியர்களை சமாதானப்படுத்தும் வகையில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கிய பிறகு கடந்த வாரம் புதிய ஊதிய அட்டவணை வெளியிடப்பட்டது. அதிரடி மாற்றங்களுடன் வெளியான புதிய ஊதிய அட்டவணையால் பைலட்கள் உள்ளிட்ட விமான ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர்.
புதிய ஊதிய அட்டவணை தொடர்பாக விளக்கமளித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், பறப்பதற்கான அலவன்ஸ் தற்போதுள்ள 20 மணிநேரத்தில் இருந்து நிலையான 40 மணிநேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், 70 மணி நேரம் விமானம் ஓட்டுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என்பதால் ஊதியம் முன்பைவிட கூடுதலாக வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயிற்சியாளர்களின் தேவை அதிகரித்துள்ளதால் அவர்களுக்கு வழங்கப்படும் அலோவன்ஸ் 40 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பை வழங்கும் ஊழியர்களின் வளர்ச்சியும் உறுதியாக மேம்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments