மழையால் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு..!
தென்காசி மாவட்டத்தில், மழையால் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது.
பொட்டல்புதூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி - பிரேமா தம்பதியின் ஒன்றரை வயது மகள் ஆதிரா. இவர்களது வீட்டில் மண்ணால் கட்டப்பட்டிருந்த சுற்றுச் சுவர், கடந்த இரு தினங்களாக பெய்த மழையால் வலுவிழந்து சிதிலமடைந்து இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்றிரவு குழந்தை ஆதிரா தனது தாத்தாவுடன் வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென சுவர் இடிந்து இருவர் மீதும் விழுந்துள்ளது.
இதில் படுகாயமடைந்த குழந்தை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்த நிலையில், குழந்தையின் தாத்தா காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Comments