திருவனந்தபுரம் - காசர்கோடு இடையே வந்தேபாரத் ரயில் சேவை..... இன்று கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
திருவனந்தபுரம் - காசர்கோடு இடையே கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயிலை, பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
2 நாள் பயணமாக கேரளா வந்துள்ள பிரதமர், திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, காசர்கோடு உட்பட 11 மாவட்டங்கள் வழியாக 586 கிலோ மீட்டர் தூரத்தை இந்த ரயில் 8 மணி நேரத்தில் கடக்கும்.
Comments