சீனாவில் உள்ள உயிரியல் பூங்காவில் ஒரே பிரசவத்தில் 6 குட்டிகளை ஈன்ற வங்கத்து வெள்ளைப்புலி..!

0 2795

சீனாவின் ஜெங்ஜோ நகர உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த அரியவகை வங்கத்து வெள்ளைப் புலி ஒரே பிரசவத்தில் 6 குட்டிகளை ஈன்றுள்ளது.

மரபணு பிறழ்ச்சியால் சில வங்கத்து புலிகள் ஆரஞ்சு நிறத்திற்கு பதிலாக வெள்ளை நிறத்தில் பிறக்கின்றன. அழிவின் விளிம்பில் உள்ளதால் வங்கப் புலி, பாதுகாக்கப்பட்ட விலங்கினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக, ஒரு புலி, 2 முதல் 4 குட்டிகள் வரை ஈனும். ஆனால், சீன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த வெள்ளை நிற வங்கத்துப் புலி, 6 குட்டிகளை ஈன்றுள்ளது.

தாய் புலியின் சிரமத்தை குறைக்க, குட்டிகளை பூங்கா ஊழியர்கள் முதலில் இன்குபேட்டரில் வைத்து வளர்த்தார்கள். அவை, தற்போது துள்ளிக் குத்தித்து விளையாடுவது, அனைவரையும் கவர்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments