அஸ்ஸாமின் தீப்ரூகர் சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்ட அம்ரித்பால் சிங்

0 1672

பஞ்சாப் பிரிவினைவாதத் தலைவர் அம்ரித் பால் சிங், அஸ்ஸாமின் தீப்ரூகர் சிறையில் தனியறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் உளவுத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் பாகிஸ்தான் தொடர்பு உள்ளிட்டமுக்கிய விவகாரங்களைக் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 36 நாட்களாக பல்வேறு வேடங்களில் பல ஊர்களில் கண்காணிப்பு கேமராவில் அம்ரித்பால் நடமாடிய காட்சிகள் ஊடகங்களில் வெளியாகின. 

இந்நிலையில், தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட அவர், அஸ்ஸாம் சிறைக்கு விமானம் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.பஞ்சாபில் மக்கள் அமைதிகாக்க கேட்டுக் கொண்ட காவல்துறையினர் பல்வேறு நகரங்களில் கொடி அணிவகுப்பு நடத்தினர். நிலைமை கட்டுக்குள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments