இந்தியா - சீனா ராணுவ உயர்அதிகாரிகள் இடையே 18வது சுற்று பேச்சுவார்த்தை
இந்தியா சீனா ராணுவ கமாண்டர்கள் மத்தியிலான 18 வது சுற்றுப்பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.
எல்லைப் பிரச்சினையில் படைக்குறைப்பு உள்ளிட்ட 3 ஆண்டுகளாக தீராத பல்வேறு பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண நேற்று இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் கிழக்கு லடாக் எல்லை அருகில் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினர்.
5 மாதங்கள் இடைவெளிக்குப் பின்னர் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.இரு நாடுகளின் ராணுவத்தினரும் எல்லையை நோக்கிய சாலைக் கட்டுமானப் பணிகளில் தீவிரமாக இயங்கி வருகின்றன.
ராணுவத் தளவாடங்கள் மற்றும் வீரர்களை எல்லைக்குவிரைவில் கொண்டு செல்வதற்கானகட்டமைப்புப் பணிகள் எல்லையின் இருபக்கமும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் டெப்சாங், டெம்சோக் போன்ற மலைப் பகுதிகளில் சீனப்படைகளை நீக்க வேண்டும் என்று இந்தியாவின் சார்பில் வலியுறுத்தப்பட்ட போதும் சீன ராணுவத்தினர் அதில் அவசரம் காட்டவிரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
Comments