கடனாக சிகரெட் தர மறுத்த டீக்கடை உரிமையாளரை உருட்டு கட்டையால் தாக்கிய இளைஞர்..!
தாம்பரம் அடுத்துள்ள பெருங்களத்தூரில், கடனாக சிகரெட் தர மறுத்த டீக்கடை உரிமையாளரை, இளைஞர் உருட்டுக்கட்டையால் தாக்கியது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெருங்களத்தூரில் உள்ள டீக்கடைக்கு உருட்டுக்கட்டையுடன் வந்த இளைஞர், உரிமையாளர் சந்திரனை தாக்கத் தொடங்கினார்.
டீக்கடையில் இருந்தவர்கள் இளைஞரை மடக்கி பிடித்து தாக்கி, பின்னர் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இளைஞர் பெயர் அஜித் என்பதும், முதல்நாள் இரவு மது போதையில் வந்து சிகரட் கடனாக கேட்டதற்கு கடை உரிமையாளர் தர மறுத்ததாகவும், அதனால் அவரை தாக்கியதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Comments