டுவிட்டரில் புளூ டிக் சேர்ப்பு - நெட்டிசன்கள் கிண்டல்
10 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடரும் டுவிட்டர் கணக்குகளில் புளூ டிக் அடையாளம் மீண்டும் இடம்பெற்றதால் டுவிட்டர் பயன்பாட்டாளர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு சந்தா தொகை செலுத்தாத டுவிட்டர் கணக்குகளில் இருந்து புளூ டிக்குகள் நீக்கப்படும் என எலன் மஸ்க் அறிவித்திருந்தார்.
அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு பணம் செலுத்தாதவர்களின் டுவிட்டர் கணக்குகளில் இருந்து புளூ டிக் நீக்கப்பட்டது.
இந்நிலையில், பணம் செலுத்தாத போதிலும், 10 லட்சம் பேர் பின்தொடரும் டுவிட்டர் கணக்குகளில் மீண்டும் புளூடிக் சேர்க்கப்பட்டுள்ளது. டுவிட்டர் நிறுவனத்தின் நிலைப்பாட்டை நெட்டிசன்கள் சிலர் சுட்டிக்காட்டி கிண்டல் அடித்து வருகின்றனர்.
Comments