திருப்பதி தரிசன டிக்கெட் - போலி இணையதளம் கண்டுபிடிப்பு..!
திருமலை திருப்பதி தேவஸ்தானம் இணையதளம் போன்று மேலும் ஒரு போலி இணையதளம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்திற்காக இணையதளம் வாயிலாக பக்தர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர்.
இதனை பயன்படுத்தி போலி இணையதளங்களை உருவாக்கி பக்தர்களிடம் இருந்து பணம் பறிக்கும் செயலில் சிலர் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், மேலும் ஒரு போலி இணையதளம் தொடர்பாக காவல்நிலையத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இது போன்று 40 இணையதளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் மிகுந்த கவனத்துடன்சரியான இணையதளத்தை பயன்படுத்துமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டுகொண்டுள்ளது.
Comments