நிதி அமைச்சர் ஊழல் குறித்த ஆடியோ விவகாரம் - அண்ணாமலை அறிக்கை

0 3156

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறி வெளியான ஆடியோவின் உண்மைத்தன்மையை அறிய தடயவியல் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் கரு நாகராஜன், வி.பி.துரைசாமி உட்பட ஆறு நபர்கள், இன்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கவுள்ளனர்.

சமூக வலைதளங்களில் பகிரபட்டு வரும் இந்த ஆடியோ குறித்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியுட்டுள்ள அறிக்கையில்   தமிழக நிதியமைச்சர் பேசியதாக வெளியான ஆடியோவின் உண்மைத் தன்மையை சுதந்திரமாக ஆய்வு செய்யக்கோரி பாஜக தலைவர்கள் குழு ஆளுநரை சந்திக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் இந்த ஆடியோ பொய்யானது, யார் குரலில்  வேண்டுமானாலும் இப்படி பேசி வெளியிடலாம் என நிதி அமைச்சர் கூறும் நிலையில், நீதிமன்றம் முன்னிலையில் குரல் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்த தயாரா என அண்ணாமலை கேள்வி எழுப்பிள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments