திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, புதுச்சேரி மருத்துவரிடம் ரூ.34 லட்சம் மோசடி..!
திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, புதுச்சேரி மருத்துவரிடம் இருந்து 34 லட்சம் ரூபாயை அமெரிக்காவை சேர்ந்த பெண் என கூறிக் கொண்டு பெண் ஒருவர் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரும் பாலாஜி, ஏற்கனவே திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
அவருக்கு 2-வது திருமணம் செய்ய முடிவு செய்து, அவர் குறித்த தகவல்களை திருமண தகவல் இணையதளத்தில் பெற்றோர் பதிவேற்றம் செய்தனர். இதை பார்த்து, பாலாஜிக்கு அமெரிக்காவை சேர்ந்தவர் என கூறிக்கொண்டு சோமஸ்ரீ நாயக் என்ற பெண் அறிமுகமானார்.
தாம், அமெரிக்காவில் டாக்டருக்கு படித்து முடித்துவிட்டு சிரியாவில் வேலை பார்த்து வருவதாக தெரிவிக்கவே, அவரது பேச்சில் மயங்கிய பாலாஜி, வாட்ஸ் அப் மூலம் நட்பாக பேச தொடங்கியுள்ளார்.
இதில் இருவருக்கும் பிடித்து போகவே திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். அப்போது சோமஸ்ரீ தனக்கு பணத்தேவை இருப்பதாக கூறி பாலாஜியிடம் இருந்து சிறிது சிறிதாக 34 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் (( தவணைகளாக ரூ.34 லட்சத்து 55 ஆயிரத்து 261 ))வாங்கி உள்ளார். அதன்பிறகு பேசுவதை தவிர்க்கவே, சோமஸ்ரீ மீது சந்தேகம் ஏற்பட்டு, அவரது டாக்டர் பதிவு எண்னை பாலாஜி கேட்டுள்ளார். இதையடுத்து தன்னுடனான தொடர்பை சோமஸ்ரீ துண்டித்ததால், தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சைபர் கிரைம் காவல்துறையில் பாலாஜி புகார் அளித்தார்.
Comments