தமிழகத்தில் முதன்முறையாக ஒரே இடத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய 89 நடுகற்கள் கண்டுபிடிப்பு
ஓசூர் அருகே ஒரே இடத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய 89 நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கெலமங்கலத்திலிருந்து பாரந்தூர் செல்லும் சாலையில் உள்ள கூலி சந்திரம் கிராமத்தில் சிவன் கோவில் அருகே பல ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து பண்டிகை கொண்டாடும் பொதுஇடத்தில், குரும்பர் இனமக்கள் வழிபடும் 14-ஆம் நூற்றாண்டு தொடங்கி 18-ஆம் நூற்றாண்டு வரையிலான நடுகற்கள் பராமரிப்பின்றி ஒரே இடத்தில் கிடக்கின்றன.
ஓசூரை சுற்றியுள்ள தேர்பேட்டை, நாகொண்டபள்ளி, சிங்கிரிப்பள்ளி, பிக்கனப்பள்ளி, கொத்தூர், தொகரப்பள்ளி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களிலும் கற்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Comments