சினிமா பாணியில் ஆப்பிள் ஸ்டோரில் ரூ.4 கோடி மதிப்பிலான 436 ஐபோன்கள் திருட்டு

0 1771
சினிமா பாணியில் ஆப்பிள் ஸ்டோரில் ரூ.4 கோடி மதிப்பிலான 436 ஐபோன்கள் திருட்டு

அமெரிக்காவில், சினிமா பாணியில் ஆப்பிள் ஸ்டோரின் சுவற்றில் துளையிட்டு நுழைந்த திருடர்கள் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 436 ஐபோன்களை திருடிச் சென்றுள்ளனர்.

சியாட்டில் பகுதியிலுள்ள ஆப்பிள் ஸ்டோருக்கு அருகே அமைந்துள்ள சியாட்டில் காபி கியர் கடையின் கதவை உடைத்து, அதன் பாத்ரூம் சுவற்றை துளையிட்டு நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் ஐ-போன்களை திருடிச் சென்றனர்.

இதுகுறித்து கடையின் உரிமையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் இரு நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும், வணிக கட்டிடத்தின் வரைபடங்கள் கொள்ளையர்களிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments