வடகொரிய ஏவுகணையை சுட்டுவீழ்த்த தயாராக இருக்குமாறு ராணுவத்திற்கு ஜப்பான் உத்தரவு..!
முதல் ராணுவ உளவு செயற்கைக் கோளை செலுத்த தயாராக உள்ளதாக வடகொரியா அறிவித்த நிலையில், அந்நாட்டின் பாலிஸ்டிக் ஏவுகணையை சுட்டு வீழ்த்த தயாராக இருக்குமாறும் ராணுவத்திற்கு ஜப்பான் உத்தரவிட்டுள்ளது.
2012 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில், செயற்கைக்கோள்கள் ஏவுவதாககக்கூறி பாலிஸ்டிக் ஏவுகணைகளை வட கொரியா ஏவி சோதித்த நிலையில், அந்த இரு ஏவுகணைகளும் ஜப்பானின் ஒகினாவா தீவு வழியே சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், செயற்கைக்கோளை செலுத்த உள்ளதாக வடகொரியா அறிவித்துள்ள நிலையில், ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் நடவடிக்கைகளுக்கு உத்தரவிட வாய்ப்புள்ளதாக ராணுவத்திடம் ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹமாடா தெரிவித்துள்ளார்.
ஏவுகணையின் சேதத்தை குறைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ராணுவத்திற்கு ஹமாடா அறிவுறுத்தியுள்ளார்.
Comments