அதிகாலை 4 மணிக்கு டீக்கடையில் மது குடிக்க டம்ளர் கேட்டு தராத டீக்கடைக்காரர் மீது தாக்குதல்..!

0 2661

திருநெல்வேலியில், அதிகாலை 4 மணிக்கு டீக்கடையில் மது குடிக்க டம்ளர் கேட்டு தராத டீக்கடைக்காரரை கூலித் தொழிலாளி தாக்கும் சிசிடிவி பதிவு வெளியானது.

தொண்டர் சன்னதி தெருவில் சுப்பையா என்பவர் நடத்தி வரும் டீக்கடைக்குச் சென்ற அதேப் பகுதியைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி மாரியப்பன், மது அருந்த டம்ளர் கேட்டதாக கூறப்படுகிறது.

கடை திறந்த சிறிது நேரத்திலேயே கடையில் வைத்து மது அருந்த வந்ததை விரும்பாத சுப்பையா, கடையில் வைத்து மது அருந்தக் கூடாதென கூறியதோடு, டம்ளரும் வழங்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த மாரியப்பன் கடைக்குள் புகுந்து சுப்பையாவை தாக்கும் காட்சி வெளியானது. இதுபற்றி, டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments