டெக்சாஸ் மாகாணத்தில் மினி வேன் மீது சரக்கு ரயில் மோதியதில் ஒருவர் பலி..!

0 2259

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வேகமாக வந்த சரக்கு ரயில் மோதியதில் தண்டவாளத்தில் நின்ற மினி வேன் தூக்கி வீசப்படும் வீடியோ வெளியாகி உள்ளது.

சம்பவத்தன்று காலை ஒரு மினி வேனும், பிக்கப் வாகனமும் தண்டவாளத்தில் ஒன்றுக்கொன்று மோதி விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து ஏற்பட்டு தண்டவாளத்தில் நின்றிருந்த மினி வேன் மீது வேகமாக வந்த சரக்கு ரயில் மோதியதாக டெக்சாஸ் பொது பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

மினி வேனில் இருந்தவர் உயிரிழந்த நிலையில், பிக்கப் வாகனத்தில் இருந்தவர் முன்கூட்டியே வெளியேறியதால் அதில் இருந்தவருக்கு காயம் ஏற்படவில்லை எனவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments