ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உணவகத்தில் தீ விபத்து - 2 பேர் உயிரிழப்பு
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன், 10 பேர் காயமடைந்தனர்.
சலமன்காவின் மத்திய பகுதியில் உள்ள இத்தாலிய உணவகமான புர்ரோ கனாக்லியா பார் மற்றும் ரெஸ்டாரண்ட்டில் வாடிக்கையாளர்கள் உள்ளே இருந்தபோது இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
உணவகத்தில் இருந்து வெளியே வரும் பிரதான வழியில் தீ விபத்து ஏற்பட்டதால் உள்ளே இருந்தவர்களால் உடடியாக வெளியே தப்பிச் செல்ல முடியவில்லை எனக் கூறப்படுகிறது. தீ விபத்து தொடர்பாக ஸ்பெயின் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments