வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து நகை, பணம் கொள்ளை.. சென்னையில் பயங்கரம்

0 2354
சென்னை ஆதம்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கழுத்தை நெறித்து கொலை செய்து 15 சவரன் நகை மற்றும் இரண்டரை லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

சென்னை ஆதம்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கழுத்தை நெறித்து கொலை செய்து 15 சவரன் நகை மற்றும் இரண்டரை லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

தில்லை கங்கா நகர் 12வது தெருவைச் சேர்ந்த ஸ்ரீராம், பல்லாவரத்தில் தனியார் கம்பெனி நடத்தி வருகிறார். எல்.ஐ.சி நிறுவனத்தில் பணிபுரியும் இவரது மனைவி பானுமதி மற்றும் தாயார் சிவகாம சுந்தரி ஆகியோர் ஒன்றாக வசித்துவருகின்றனர்.

சம்பவத்தன்று, வழக்கம்போல் பணிமுடித்து வீடு திரும்பியபோது பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த ஸ்ரீராம், மூச்சுபேச்சு இல்லாமல் மூக்கு மற்றும் புடவையில் ரத்தம் கசிந்து நிலையில் இருந்த தாயை கண்டு கதறி அழுதார். மூதாட்டியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி மற்றும் வளையல் மாயமாகி இருந்தது.

மேலும், பீரோவிலிருந்த நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தடயங்களை சேகரித்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொலையாளிகளை தேடிவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments