ஐஸ்கிரீம் சாப்பிட்ட 12 வயது சிறுவன் பலி.. அத்தை செஞ்ச நாசவேலை..! பாசமலர் மோசமலரானது

0 3700

விஷம் கலந்த ஐஸ்கிரீம் கொடுத்து 12 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தந்தையின் சகோதரியை போலீசார் கைது செய்தனர் . குடும்பத்தகராறில் அண்ணன் குடும்பத்துக்கு விஷம் வைத்த மோச மலர் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.

கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகே கொயிலாண்டி பகுதியைச் சேர்த்தவர் முகமது அலி. 6-ம் வகுப்பு படித்து வந்த இவரது மகன் கடந்த ஞாயிறன்று வீட்டின் குளிர்பதனப்பெட்டியில் இருந்து ஐஸ்கிரீமை எடுத்து சாப்பிட்டார். இதனால் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். பிணக்கூறாய்வு அறிக்கையில் சிறுவன் சாப்பிட்ட ஐஸ்கிரீமில் அமோனியம் சல்பர் என்ற ரசாயணம் கலந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஐஸ்கிரீம் எங்கு வாங்கப்பட்டது ? என்று விசாரித்த போது ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தது முகமது அலியின் சகோதரியான தாஹிரா என்பது தெரியவந்தது.

தாஹிராவை பிடித்து விசாரித்த போது, ஐஸ்கிரீமில் விஷம் கலந்து கொடுத்ததால் சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது. அண்ணன் முகமது அலியின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் தாஹிராவுக்கும் , முகமது அலியின் குடும்பத்தினருக்கும் நீண்ட நாட்களாக குடும்பத்தகராறு இருந்துள்ளது. தகராறின்போது தாஹிராவை பைத்தியம் என்று திட்டியதாக கூறப்படுகின்றது.

இதனால் ஆத்திரத்தில் இருந்த தாஹிரா அண்ணன் குடும்பத்தின் கதையை மொத்தமாக முடிக்க திட்டமிட்டு, பேமிலி ஐஸ்கிரீம் பேக் ஒன்றை வாங்கி உள்ளார். அந்த ஐஸ்கிரீமில் எலிகளை கொல்லும் விஷமான எலி பேஸ்ட்டை கலந்துள்ளார். அந்த விஷ ஐஸ்கிரீமை முகமது அலியின் மகனிடம் கொடுத்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அதனை வாங்கி சாப்பிட்டதால் அவன் பலியானது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

ஐஸ்கிரீமில் கலக்கப்பட்ட எலி பேஸ்டில் அமோனியம் சல்பர் என்னும் ரசாயணம் உள்ளதால் அது விரைவாக ரத்தத்தில் கலந்து சிறுவனை பலி கொண்டதாக தெரிவித்த போலீசார், தாஹிராவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடந்து கொண்டதாக தெரிவித்தனர். அவர் ஐஸ்கிரீம் வாங்கிய கடை, எலி பேஸ்ட் வாங்கிய கடைகளுக்கு அழைத்துச்சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

காதலனை கொலை செய்ய மாசா குளிர்பானத்தில் விஷம் கலந்த காதலி போல, அண்ணன் குடும்பத்தைக் கொலை செய்ய ஐஸ்கிரீமில் பெண் விஷம் கலந்த சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments